சுற்றுச்சூழல் காப்போம்
சுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும்
திங்கள், 4 நவம்பர், 2019
Vermi-compost from Bamboo leaf
It was found that, approximately 11.25 tons of bamboo leaf wastes will be obtained from the one hectare of bamboo forests. Bamboo leaf wastes consist of 19.5-26.3% cellulose, 11.30-13.50% hemi cellulose and 8.7-11.60 % lignin. It also contains 34.6-37.5% organic carbon.
Preparation
Mix the bamboo leaf wastes and cow dung in the ratio of 5:1 and add microbial consortia (@ 2 kg/ton) and allow it for partial composting
Then release the earthworms into the compost pit (Eudrilla euginea) @ 3 kg/ ton and keep it for 75 days
Finally the vermicompost was prepared after 75 days of composting.
This vermicompost contains
· 1.14% nitrogen
· 0.65% phosphorus
· 0.88% potassium
· 16.54%humus content
Bamboo production can sequester 2.03 metric tons of carbon per hectare per year, based on 12 data points from four sources. This value includes carbon sequestered in long-lived products from harvested bamboo
Bamboo is a perennial evergreen plant with annual leaf exchange. New leaves emerge in the springtime to gently push off old foliage.Scientifically speaking bamboo is undoubtedly grass, but in terms of legislation, bamboo is often classified as a treeBamboo is the fastest growing plant on this planet. It has been recorded growing at an amazing 47.6 inches in a 24 hour period.Bamboo is a crucial element in the balance of oxygen and carbon dioxide in the atmosphere. A grove of bamboo release 35% more oxygen than an equivalent stand of trees. Because of this, planting bamboo is a great way to reduce your carbon footprint and help fight global warmingBamboo is a viable replacement for wood. It can be harvest in 3-5 years versus 10-20 for most softwoods. It can out yield pine 6 to 1 in biomass production. It is also one of the strongest building materials with a tensile strength of 28,000 psi. To help give you an idea how much this is, mild steel measures 23,000 psi
மண்புழு உரம் கேள்வி பதில்
மண்புழு உரம் என்றால் என்ன?
மண்புழு உரம் என்பது, மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் அங்கக உரத்தைக் குறிக்கிறது. அது புழு வார்ப்புகள் (கழிவு பொருட்கள்), மட்கிய அங்கக பொருட்கள், உயிருள்ள மண்புழுக்கள், பட்டுக்கூடு மற்றும் பிற உயிரினங்கள் உள்ளடக்கிய ஒரு கலவையாகும். மண் புழு உரம் தயாரிப்பு, நச்சு அல்லாத திட மற்றும் திரவ அங்கக கழிவுகளை மட்க செய்வதற்கான ஒரு சரியான பயனுள்ள, செலவு குறைந்த மற்றும் திறமையான மறுசுழற்சி தொழில் நுட்பமாகும்
மண்புழு வளர்ப்பு என்றால் என்ன?
மண்புழு வளர்ப்பு என்பது மண்புழுக்களை வளர்த்தல் என்று வரையறுக்கப்படுகிறது. மண்புழுக்கள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகிறது. மட்கிய எரு உருவாக்குபவை மற்றும் மட்கிய பொருட்களை உண்ணுபவை என வரையறுக்கப்படுகிறது. முதல் குழு மேற்பரப்பில் குடியிருந்து கிட்டத்தட்ட 90% அங்கக பொருட்களை உண்ணுகின்றன. அவைகளின் நிறம் பொதுவாக கறுப்பாக இருக்கும். மேலும் எபிஜீயிக் அல்லது கழிவுப் பொருட்களை உண்ணும் மண்புழுக்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக இந்த மண்புழுக்கள் மண்புழு உரம் தயாரிக்க உதவுகின்றன. இரண்டாவது குழு, மட்கிய பொருட்களில் துளையிடும் புழுக்கள், உரம் தயாரிப்பிலும் மற்றும் மண்ணை இளக வைத்தலிலும் பயன்படுகின்றன. பொதுவாக, துளையிடும் புழுக்கள் மண்ணில் மட்கிய உரத்தைக் கலந்து விநியோகிப்பதில் உதவும்.
மண்புழுக்கள் விரைவாகவும் திறமையாகவும் அங்கக கழிவுகளை சிதைக்கும் என்று நிரூபிக்கப்பட்டது. எனினும், மண்புழு உரமாக்கல் திறனை அதிகரிக்க, கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். புழுக்கள் உயிர்ப்புடன் நன்கு செழித்து வளர ஈரப்பதம் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, இனப்பெருக்கம் செய்ய நடவடிக்கை
மண்புழுக்கள் எப்படி வேலை செய்கிறது?
மண்புழுக்கள் தங்கள் உணவை, தங்கள் உடல் எடையைப் போல இரண்டு முதல் ஐந்து மடங்கு எடுத்துக்கொள்ளும் அவைகள் தங்கள் வளர்ச்சிக்கு, ஒரு சிறிய அளவு கழிவு பொருட்களை உட்கொள்ளும். பின்னர் வெர்மிகாஸ்ட்ஸ் என்ற சளி பூசிய ஜீரணமாகாத பகுதியை வெளியேற்றும். மண்புழு எடுத்துக் கொள்ளும் உணவானது, பல்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்குட்பட்டு, அதனுடைய உணவுக்குழாயில் அரைக்கப்பட்டு, அங்ககப் பொருட்களை மண்புழு உரமாக மாற்றுகிறது. மண்புழு உரத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தாவரங்களினால் எடுத்துக் கொள்ளப்படும் மற்றும் நீரில் எளிதில் கரையும் பொருளாக உள்ளது. மண்புழு உரதில், நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துகள், வைட்டமின்கள், என்சைம்கள், உயிர் எதிர்ப்பு பொருள், வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நுண்ணுயிர்கள் அடங்கி உள்ளன
மண்புழு பண்ணை தொடங்கிய சில வாரங்களுக்கு பின்பு, மண்புழுக்கள் கழிவு பொருட்களை சாப்பிடவில்லை, ஏன்?
முதலில் ஒரு புதிய மண்புழு பண்ணை தொடங்கும் போது, புழுக்கள் தங்கள் புதிய சூழலை பயன்படுத்தி கொள்ள கொஞ்ச காலம் எடுத்து கொள்ளும். மேலும் முதலில் படுக்கையின் அடியில் உள்ள பொருளைரும் போது, நீங்கள் புதிய கழிவு பொருட்களை தேவையான அளவில் சேர்க்க வேண்டும். பின்னர் தொடர்ந்து கழிவுகளை சேர்க்கலாம்.
நான் எதாவது தவறாக செய்யும் போது, என் புழுக்கள் தப்பிக்க முயற்சி செய்யும். புழுக்கள் வாழ தகுந்த சூழ்நிலை அமைய வில்லை என்றால் அவை திரளாக உரக்குவியலை விட்டு வெளியேற முயற்சி செய்யும். மண் புழுக்களின் தீவனம், படுக்கையின் ஈரப்பதம், படுக்கை பொருளின் அமில கார தன்மை போன்ற காரணத்தினால் மண்புழுக்கள் வெளியேற தொடங்கும். இதே நிலை தொடர்ந்து நடக்கிறது என்றால், அதற்கு காரணமான பொருட்களை, நீங்கள் திரும்பிச் சென்று சரிபார்க்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் விரைவா
மட்க கூடிய செயலை செய்யும் புழுக்கள் இருபாலினம் கொண்டவை. ஒரு முதிர்ந்த புழு, ஆண் மற்றும் பெண் பாலியல் உறுப்புகளைக் கொண்டு இருக்கும். 55-நாட்களுக்குப்பிறகு, ஒவ்வொரு முதிர்ந்த புழுவும் பாலியல் முதிர்ச்சி அடையும். இனச்சேர்க்கைக்கு பிறகு, ஒவ்வொரு கூட்டு புழு கூட்டிலும் சுற்றுச் சூழ்நிலை மற்றும் உணவை பொறுத்து, மூன்று முதல் இருபது புழுக்கள் இருக்கும். மண் புழுக்கள் என்ன பொருட்களை உணவாக எடுத்து கொள்கின்றன ?
புழுக்கள், ஈரமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் கார்பன் குறைவாக உள்ள பொருட்களை உணவாக எடுத்து கொள்ளும். அழுகும் பழங்கள் அல்லது காய்கறிகள், சமையலறை கழிவுகள், சில விலங்குகளின் எரு, தோட்ட கழிவு மற்றும் உரம், செதுக்கப்பட்ட அட்டைகள் ஆகியவை சிறந்த உணவுகளாகும் . அதிக அமோனியா அல்லது நைட்ரஜன் உள்ள பொருட்கள், கொழுப்பு மற்றும் எண்ணெய் அதிக அளவில் உள்ள பொருட்கள், வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை புழுக்கள் விரும்பாது.
ஒரு மண் புழுவால் எவ்வளவு சாப்பிட முடியும்?
புழுக்கள், நாள் ஒன்றுக்கு அதன் உடல் எடை அளவு சாப்பிட முடியும் மற்றும் அந்தப்புழுக்களின் வகையைப் பொறுத்தும், புழுக்கள் எடுத்து கொள்ளும் உணவின் தரத்தை பொருத்தும் மற்றும் அது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து உணவின் அளவு வேறுபடும். மண் புழுக்கள் நுண்ணிய மற்றும் அங்கக பொருட்களை சிதைப்பதற்கு முன்னர் பல பில்லியன் நுண்ணுயிர்களான
பாக்டீரியா, பாசிகள், பூஞ்சை மற்றும் நூற்புழுக்கள் ஆகியவற்றின் உதவியுடன் அங்கக பொருட்களை மென்மையாக்கி அவற்றை துகள்கள் ஆக்குகின்றன. புழுக்கள் மூலம் அங்கக பொருளைப் பதப்படுத்த 90 நாட்கள் எடுத்துக்கொண்டு, அறுவடைக்குத் தயாராக இருக்கும்.









